×

குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்க கவுன்சலிங்: இலவச தொலைபேசி எண் அறிவிப்பு

சென்னை: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்க சம்வேதனா என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் பயன்பாட்டிற்கு வரும். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் தமிழகம் முழுவதும்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு  உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் மன அழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளை போக்கும் வகையிலும், வேண்டிய ஆலோசனைகளை பெற 18001212830  என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு குறிப்பிட்ட ஆலோசனைகளை பெற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணை கொண்டுவந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.Tags : phone number announcement , Counseling to relieve stress in children: Free phone number announcement
× RELATED 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு: ஆன்லைன் கவுன்சலிங் தொடங்கியது