கிண்டி அரசு கொரோனா மருத்துவமனையில்80 நாட்களில் 2,727 பேர் குணமடைந்துள்ளனர்

சென்னை: கிண்டி அரசு கொரோனா மருத்துவமனையில் 80 நாட்களில் 2,727 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததை தொடர்ந்து கிண்டி கிங் ஆய்வகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. ஜூலை 7ம் தேதி தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. சி.டி.ஸ்கேன், ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இங்கிருந்து தற்போது வரை 2,727 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுகுறித்து சுகதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:  மருத்துவமனை துவங்கப்பட்டதில் இருந்து இதுவரை, 3,376 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,727 பேர் குணமடைந்துள்ளனர். நீரிழிவு நோயாளிகள் 570 பேர், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் 427 பேர், நரம்பியல் நோய் பாதிக்கப்பட்டவர்கள் 20 பேர், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 138 பேர், சிறுநீரக நோய் ஏற்பட்டவர்கள் 67 பேர், இதய நோய் உள்ளவர்கள்  142 பேர், காசநோயாளிகள் 11 பேர், புற்றுநோயாளிகள் 13 பேர், தைராய்டு நோயாளிகள் 51 பேர், கல்லீரல் நோயாளிகள் 6 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 565 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories: