100 கிலோ குட்கா பொருட்கள் காருடன் பறிமுதல்

ஆவடி: ஆவடி டேங்க் பேக்டரி சாலை, கோயில்பதாகை சாலை சந்திப்பில் நேற்று அதிகாலையில் ஆவடி டேங்க் பேக்டரி எஸ்ஐக்கள் அப்துல்நாசர், புவனேஸ்வரி ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. அதை மறித்தபோது, அதில் இருந்த 2 வாலிபர்கள், தப்பியோடினர். அவர்களை, சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், காரை சோதனை செய்தபோது, குட்கா பொருட்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், சுமார் 100 கிலோ குட்கா பொருட்களுடன், காரையும் வாலிபர்களையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், ஆவடி அடுத்த கோடுவள்ளி, கன்னிகாபுரம், கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த முத்துகருப்பசாமி (28), ரமேஷ் (26). திருவள்ளூரில் முகேஷ் என்பவரிடம் குட்கா பொருட்களை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு சப்ளை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீ சார் வழக்குப்பதிந்து, 2 பேரையும் கைது செய்தனர்.

* ஆவடி அடுத்த அரிக்கம்பேடு, அமிர்தபுரம், சாஸ்தா நகரை சார்ந்தவர் விநாயகம் (43). ஆவடி - செங்குன்றம் நெடுஞ்சாலை, காட்டூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் விநாயகம், கடையை பூட்டி கொண்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க சென்றார். அப்போது,  நள்ளிரவில் கடையை உடைத்து உள்ளே நுழைந்த மர்நமபர்கள், ரூ.5 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பண்டல்கள், மளிகை பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்னர்.

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் பெட்ரோல் பங்க் உள்ளது. சில நாட்களுக்கு முன், பைக்கில் பெட்ரோல் போட வந்த 2 பேர், அங்கிருந்த ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.30 ஆயிரத்தை பறித்து சென்றனர். புகாரின்படி திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் மகிதா கிருஷ்டி, வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில், பொன்னேரி அடுத்த காவல்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (21). மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு மேட்டு காலனியை விஷ்ணு (22) ஆகியோர் என தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவர்களை, நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பூந்தமல்லி: சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் அய்யனார் (40). அதே பகுதியில் மளிகைக்கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷெட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. அருகில் உள்ள மற்றொரு கல்லா பெட்டியில் ரூ.7 லட்சம் இருந்ததை கொள்ளையர்கள் கவனிக்காதததால் தப்பியது. இதேபோல், அருகில் உள்ள அடுத்தடுத்த 4 கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதுவும் கொள்ளை போகவில்லை. புகாரின்படி போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

புழல்: சோழவரம் அருகே நல்லூர் ஊராட்சி டாக்டர் வரப்பிரசாத் ராவ் நகர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று அதிகாலையில் அப்பகுதியில் சுந்தரம் (29) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து சுந்தரத்தை கைது செய்தனர்.

* செங்குன்றம் மார்க்கெட் அருகே நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர்  மயங்கி கிடந்தார். அவரை, செங்குன்றம் போலீசார் மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் ஒருவர் அவரை கல்லால் தாக்குவது தெரிந்தது. விசாரணையில், நாரவாரிக்குப்பம் சுப்பிரமணிய பாரதியார் தெருவை் சேர்ந்த சாதிக் பாட்சா (40) என்பவர் முதியவரை தாக்கிய தெரிந்தது. அவரை, போலீசார் அவரை கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மாரபாளையத்தை சேர்ந்தவர் நம்பியார் (42). ராகு ரெட்டிமேடு பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் புதிதாக கட்டும் வீட்டில் இருந்து,  டிரில்லிங் மெஷின் உள்பட ரூ.40 ஆயிரம் பொருட்களை கொள்ளையடிக்கப்பட்டது. புகாரின்படி கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (32). இவரது மனைவி மீனா (25). நேற்று முன்தினம் இரவு தம்பதி, காற்றுக்காக கதவை திறந்துவிட்டு தூங்கினர். நள்ளிரவில் உள்ளே புகுந்த மர்மநபர்கள், மீனாவின் கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பினர். புகாரின்படி, சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: