×

யோயோன்னா என்னய்யா? மோடி கேள்வி

புதுடெல்லி: ‘ஆரோக்கியமான இந்தியா’ இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் உள்ள உடல் நல ஆர்வலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது, 13வது ஐபிஎல் 20 தொடர் போட்டிக்காக துபாய் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி கேட்பன் விராட் கோலியிடம் மோடி பேசினார். அப்போது, `யோ-யோ உடற்பயிற்சி குறித்து கேள்விப்பட்டேன். கேப்டனும் இதில் வெற்றி பெற வேண்டுமா? அல்லது விதி விலக்கு உள்ளதா?’ என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த கோலி, `20 மீட்டர் இடைவெளியில் இரண்டு இலக்குககள் வைக்கப்பட்டிருக்கும். `பீப்’ ஒலித்ததும் ஒடத் துவங்கும் வீரர் அடுத்த பீப் ஒலி வருமுன்பாக மறுமுனையை அடைந்திருக்க வேண்டும். மூன்றாவது பீப் ஒலிக்கு முன், ஆரம்ப இடத்தை வந்தடைய வேண்டும். இந்த போட்டி உடல் திறனில் முக்கியமானது. இதில் வீரர்கள் தேர்வாக வேண்டும் என்பது கட்டாயம்,’’ என்று விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் மிலிந்த் சோமன், ருஜூதா திவேகர், ஜம்மு காஷ்மீர் பெண்கள் கால்பந்தாட்ட வீராங்கனை அப்சான் ஆகியோரும் பங்கேற்றனர்.

Tags : யோயோன்னா என்னய்யா? Modi question
× RELATED சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய...