×

ஐபிஎல் 2020 டி20: பெங்களூரு அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி

துபாய்: ஐபிஎல் 2020 டி20 5-வது லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கு 207 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெறும் 6-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் எடுத்து 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது.


Tags : IPL ,Punjab ,Bangalore , IPL 2020 T20: Punjab beat Bangalore by 97 runs
× RELATED ஐபிஎல் டி20: டெல்லி கேபிடல்ஸ் அணியை 59...