அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவ நடவடிக்கை எடுங்க: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.!!!

சென்னை: அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்தில், சித்தா, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவமாக உள்ள யுனானி, கொமியோபதி பொன்ற இந்திய மருத்துவமனைக்கு இந்திய அரசு முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே, அகிய இந்திய சித்தா இன்ஸ்டிடியூட் அமைக்க திட்டமிட்டு வரும் மத்திய அரசுக்கு  நன்றி.

இந்திய மருத்துவ முறைகளை முன்னிலைப்படுத்தும் விதமாக செயல்படும் மத்திய அரசுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் இருந்து அகில இந்திய சித்த மருத்து நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். சித்த மருத்துவ முறை தொன்றிய முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

எனவே, தமிழகத்தில் சித்த மருத்துவ நிறுவனம் அமைவது பொருத்தமாக இருக்கும். தமிழகத்தில் விமானம், ரயில், சாலை போக்குவரத்து உள்ளிட்டவை இருக்கக்கூடிய இடம் சென்னைக்கு அருகே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, மத்திய அரசுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, அகில இந்திய சித்த மருத்து நிறுவனம் தமிழகத்தில் நிறுவப்படுவதை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், மத்திய அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக முதல்வர் பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: