தமிழகத்தில் மேலும் 5,692 பேருக்கு கொரோனா; மாநிலத்தின் மொத்த பாதிப்பு 5.63 லட்சமாக ஆக உயர்வு...சுகாதாரத்துறை அறிக்கை.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,63,691-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்தின் கொரோனா பாதிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழக அரசு நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி  பாராட்டு தெரிவித்துள்ளார். எந்த மாவட்டத்திலும் கொரோனா தொற்று விகிதம் 10% -க்கு மேல் அதிகரிக்காமல் அரசு கவனித்துக் கொள்கிறது. இந்த வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதம். தமிழகத்தில் குணமடைவோர்  விகிதம் 90.2 சதவீதமாக உள்ளது. கொரோனா உயிரிழப்போர் விகிதத்தை 1.4%-ல் இருந்து 1.2% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 6.4% பேருக்கு மட்டுமே பாதிப்பு  இருந்தது. கொரோனா இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே இலக்கு என்றார்.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,08,210 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,470 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,076-ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் இதுவரை 66,08,675 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88,784 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் மொத்தம் 68,15,644 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 90,607 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் மொத்தம் 178 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,40,015 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,546 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,23,646 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,146 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,089 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

* பீகார் - 5

* ஜார்கண்ட்- 4

* மேற்கு வங்கம்- 2

* ஆந்திரா -1

* பங்களாதேஷ்-1

Related Stories: