கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது: சீன வைராலஜிஸ்ட் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்: கொரோனா தொற்றை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியதாக, சீன வைராலஜிஸ்ட் டாக்டர் கூறியுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று கடந்த 9 மாதங்களாக உலக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சீனா மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை உரிய நேரத்தில் உலக நாடுகளிடம் தகவல்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சீனா, வூஹான் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக கூறிவருகிறது.

இதனை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கவில்லை. இந்நிலையில், கொரோனா உருவான விஷயம் குறித்து புதுபுது தகவல்கள் வெளியே வந்து கொண்டுள்ளன. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லி மெங்-யான் அமெரிக்காவில் உள்ள தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘சீன ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் தயாரிக்கப்பட்டது. இதற்கான அறிவியல் சான்றுகள் என்னிடம் உள்ளது. கொரோனா வைரஸ் குறித்து சீன அதிகாரிகளிடம் எச்சரித்தபோது, அதனை ​​அவர்கள் கேட்கவில்லை. சீன அரசு தொடர்ந்து மவுனமாக இருந்ததால் கடந்தாண்டு ஹாங்காங்கிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தேன்.

இந்த வைரஸ் இயற்கையானது அல்ல என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 22-ம் தேதி இதுகுறித்து பேசிய லீ மெங் யான்; கொரோனா வைரஸ் குறித்து உலகத்திற்கு தெரிவதற்கு முன்பே சீன அரசு அதனைக் குறித்து அறிந்திருந்ததாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை மறைக்க சீன அரசாங்கத்திற்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: