×

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி; மனிதர்களுக்கு செலுத்தி சோதனை: 2000 பேர் பரிசோதனைக்கு ஒப்புதல்

லண்டன்: கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முதல்கட்ட முயற்சியில் இங்கிலாந்து இறங்கியுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 9 லட்சத்து 72,100 பேர் பலியாகியுள்ளனர்.  அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் இந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர். உலக அளவில் கொரோனா பலியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை  90,020 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி, ரஷ்ய விஞ்ஞானிகள் என பல தரப்புகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யா, கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாகவும் அதை சோதனை செய்து பார்க்கவும் முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்தில் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்தால் அதை சோதனை செய்வதற்கு அந்நாட்டில் உள்ள மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். இந்நிலையில், இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக கொரோனா பாதித்துள்ள நோயாளிகளுக்கு இந்த தடுப்பு மருந்தை செலுத்தும் சவாலான சோதனையை நடத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இந்த சோதனைக்காக இங்கிலாந்தில் சுமார் 2000 கொரோனா நோய் தாக்கிய தன்னார்வலர்கள் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளனர். இந்த சோதனை 2021 ஜனவரியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தின் இந்த முயற்சிக்கு உலக நாடுகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Corona ,UK , UK, corona, vaccine, humans, testing, approval
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...