×

கோவிட் -19 வைரசுக்கு எதிராக அமெரிக்கா கண்டுபிடித்துள்ள 4 தடுப்பு மருந்துகளும் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன!: அதிபர் டிரம்ப் தகவல்..!!

வாஷிங்டன்: கோவிட் -19 வைரசுக்கு எதிராக அமெரிக்கா கண்டுபிடித்துள்ள 4 தடுப்பு மருந்துகளும் இறுதிக்கட்ட பரிசோதனையில் இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ஸ்பூட்னிக் - 5 என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யா அறிவித்தது. இறுதிக்கட்ட சோதனை நடைபெற்று வரும் வேளையிலும் ஸ்பூட்னிக் - 5 கொரோனா தடுப்பு மருந்தை முழுவீச்சில் ரஷ்யா தயாரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ள 4 கொரோனா தடுப்பு மருந்துகள் 3வது மற்றும் இறுதிக்கட்ட சோதனைக்குள் நுழைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதில் பிரபல நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒருமுறை மட்டுமே செலுத்தக்கூடிய தடுப்பூசியும் ஒன்றாகும். இதுகுறித்து வாஷிங்டன் தலைமை மருத்துவர் ஜான் ஒயிட் தெரிவித்ததாவது, ஜான்சன் அண்ட் ஜான்சனின் இந்த புதிய தடுப்பூசி பற்றி ஆர்வத்தை தூண்டும் ஒன்று என நான் நினைப்பது அவர்கள் இரண்டுக்கு பதிலாக ஒரு டோஸில் கவனம் செலுத்துவது தான்.

நோய் எதிர்ப்பு சக்தியை பெற லட்சக்கணக்கான மக்களுக்கு மருந்தை செலுத்தும்போது, ஒரு டோஸ் போதும் என்பது வாழ்க்கையை மிகவும் எளிதாக்குகிறது. மேலும், அவர்களது தடுப்பூசியை உறைநிலைக்கு கொண்டு செல்லும் அவசியம் இல்லை என குறிப்பிட்டார். இந்த தடுப்பூசியை அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, அர்ஜெண்டினா, பிரேசில், கொலம்பியா, மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகளில் 60 ஆயிரம் பேருக்கு செலுத்தி சோதிக்கும் நடவடிக்கையை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தொடங்கியிருக்கிறது. இந்த சோதனை கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஒரு முறை மட்டும் தடுப்பூசி செலுத்தினால் போதுமா? என்பதை அறியும் வழியாக அமைந்துள்ளது.


Tags : Trump ,United States ,Covit , Govt-19, USA, Vaccine, Final Test, President Trump
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து