×

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு : அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பரோல் வழங்கி ஐகோர்ட் அதிரடி!!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பரோல் மனுவை நிராகரித்துவிட்டதாக தமிழக அரசும், சிறைத்துறையும் தெரிவித்தன.

விசாரணையின்போது சிறைத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பேரறிவாளன் ஏற்கனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் இருந்து வெளியே அனுப்பினால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் பரோல் கோரிய மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது போன்ற சூழலில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக உள்துறை செயலாளர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. தாயார் அற்புதம்மாள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவு பெற்ற ஒருவாரத்தில் பேரறிவாளனை விடுப்பில் அனுப்ப வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Tags : Rajiv Gandhi ,Perarivalan , Deep condolences, sympathy, Tamil Nadu, tragic events, Chief Minister Palanisamy...
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...