×

91,149 பேர் பலி.. 46.74 லட்சம் பேர் குணம்... இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57 லட்சத்தை தாண்டியது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 91 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், நாட்டில் கொரோனாவால்  புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 86,508 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 57,32,519 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,129 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 91,149 ஆக உயர்ந்தது.

.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 87,374 பேர் குணமடைந்துள்ளனர்;
.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 46,74,988 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,66,382 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 81.55% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.59% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 16.86% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 11,56,569 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 6,74,36,031 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!
    
மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் :273883; குணமடைந்தோர் : 956030; இறப்பு : 33886

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46249; குணமடைந்தோர் :  502740 ; இறப்பு : 9010
    
டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 30836 ; குணமடைந்தோர் :  220866 ; இறப்பு :   5087

கேரளா : சிகிச்சை பெறுவோர் :42858 ; குணமடைந்தோர் : 104682 ; இறப்பு : 592

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :    94671; குணமடைந்தோர் : 437910 ; இறப்பு :  8266
    
ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :70357; குணமடைந்தோர் :570667 ; இறப்பு :  5506

Tags : India , India, Corona, Number, Rise
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...