×

மகாராஷ்டிரா கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவிப்பு!!

தானே: தானே மாவட்டம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்துவிழுந்த விபத்தில் 41 பேர் பலியாகியுள்ளனர். 4 வயது குழந்தை உட்பட 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும பலரை மீட்கும் பணிகள் தொடர்ந்து 4வது நாளாக நடந்து வருகிறது. தானே மாவட்டவம் பிவாண்டி நகரில் உள்ள ஜிலானி என்ற மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் தமங்கா நாக்கா அருகில் உள்ள நர்போலி பட்டேல் கம்பவுண்டில் உள்ளது. 43 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் 40 வீடுகள் உள்ளன. 150 பேர் இந்த வீடுகளில் வசித்து வந்தனர். 2 நாட்கள் முன்னதாக அதிகாலை 3.40 மணிக்கு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

தகவலறிந்து தேசிய பேரிடர் பராமரிப்பு படையினரும், மீட்பு குழுக்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் 41 பேர் பலியாகி விட்டனர். இதில் 15 வயதிற்கு உட்பட்ட 11 குழந்தைகள் ஆவர். பலியான ஒரு குழந்தைக்கு இரண்டு வயது என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இடிபாடுகளில் சிக்கியிருந்த இருந்த 20 பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் 4 வயது சிறுவன் உபேத் குரைசியும் ஒருவன். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த கட்டடம் வாழத் தகுதியற்றது என்று பிவாண்டி – நிசாம்பூர் மாநகராட்சி பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும் மக்கள் எச்சரிக்கை மீறி வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில நகர மேம்பாட்டு அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.Tags : building accident ,Maharashtra ,Government , Bhiwandi, accident, 3 storey building, collapsed, rise
× RELATED இம்மாதத்தில் இரண்டாவது முறையாக 50...