சில்லி பாயின்ட்...

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அலி கான் (29) பாகிஸ்தானை சேர்ந்தவர். அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள அலி கான், கனடாவில் நடக்கும் குளோபல் டி20 தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரீபியன் பிரிமியர் லீக் தொடர்களில் திறமையை வெளிப்படுத்தி ஐபிஎல் தொடரிலும் இடம் பிடித்துள்ளார். வலது கை வேகப் பந்துவீச்சாளரான இவரது திறமையை அடையாளம் கண்ட டுவைன் பிராவோ சிபாரிசு செய்ததால் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

* மும்பை இந்தியன்ஸ் அணியுடனான தொடக்க லீக் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 71 ரன் விளாசிய சிஎஸ்கே வீரர் ராயுடு, ராஜஸ்தான் அணியுடன் நடந்த 2வது போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் இன்னும் முழு உடல்தகுதி பெறாத நிலையில் அதிகபட்சமாக மேலும் ஒரு போட்டியில் மட்டுமே களமிறங்க மாட்டார் என்றும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் நாளை நடக்க உள்ள அந்த போட்டியில் விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சிஎஸ்கே தலைமை செயலதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

* ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக லீக் ஆட்டத்தில், சென்னை அணி 217 ரன் என்ற மிகக் கடினமான இலக்கை துரத்திய நிலையில் கேப்டன் தோனி 7வது வீரராகக் களமிறங்கியது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முன்னாள் நட்சத்திரம் கவுதம் கம்பீர் கூறுகையில், ‘அனுபவம் இல்லாத ருதுராஜ், சாம் கரனை நடு வரிசையில் இறக்கிவிட்டு, தோனி 7வது இடத்தில் பேட் செய்ய வந்தது உண்மையில் எனக்கு சர்ப்ரைசாக இருந்தது. அதில் அர்த்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கேப்டனாக முன்னின்று போராடி இருக்க வேண்டும். சென்னை அணியில் டு பிளெஸ்ஸி மட்டுமே தனித்து போராடினார்’ என்று சாடியுள்ளார்.

Related Stories: