×

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மார்ஷுக்கு பதிலாக ஹோல்டர்

துபாய்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆர்சிபி அணியுடன் கடந்த 21ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தின்போது, ஐதராபாத் வேகம் மிட்செல் மார்ஷ் வலது கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வெறும் 4 பந்துகள் மட்டுமே வீசியிருந்த நிலையில் அவர் களத்தில் இருந்து வெளியேறியது ஐதராபாத் அணிக்கு பின்னடைவை கொடுத்தது. காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதால், மிட்செல் மார்ஷ் தொடரில் இருந்து விலகி நாடு திரும்புகிறார்.

இதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐதராபாத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகிய முதல் வீரர் எம்.மார்ஷ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பரில் நடந்த வீரர்கள் ஏலத்தில் அவரை ஐதராபாத் அணி அடிப்படை விலையான ₹2 கோடிக்கு வாங்கி இருந்தது.Tags : Holder ,Marsh ,Sunrisers Hyderabad ,squad , Holder replaces Marsh in Sunrisers Hyderabad squad
× RELATED ஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத்...