அண்டை நாடுகளுடன் உறவை மத்திய பாஜ அரசு சீரழித்து விட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மத்திய அரசின் வெளிநாட்டு கொள்கைகளை காங்கிரஸ் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது. சமீப காலமாக, அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவில் விரிசல் ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இதை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. உலகளவில் பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு மிகவும் வலுவடைந்து வருவதாக அது கூறியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பி.யுமான ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், `அண்டை நாடுகளுடன் பல ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருந்த நல்லுறவை மோடி அரசு சீரழித்து விட்டது. அண்டை நாடுகளுடன் எவ்வித நட்புறவும் இல்லாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது,’ என்று கூறியுள்ளார். மேலும், இதனுடன் `தி எகனாமிஸ்ட்’ இதழில் வெளியான `இந்தியா உடனான வங்கதேசத்தின் உறவு பலவீனமாகிறது; சீனாவுடன் வலுவடைகிறது,’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையையும் இணைத்துள்ளார்.

Related Stories: