×

திமுக எம்பி கதிர் ஆனந்தை மிரட்டியது யார்? போலீஸ் விசாரணை

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால தொடரில் பங்கேற்ற  திமுக எம்பி கதிர் ஆனந்த், தமிழ்நாடு இல்லத்தில் தங்கிருந்தார், அப்போது, தன்னை உளவுத்துறை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு வந்த 2 பேர் மிரட்டியதாக, மக்களவையில் தெரிவித்தார். இது பற்றி காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக முறைப்படி வழக்கு பதிந்த டெல்லி சாணக்கியாபுரி காவல் நிலைய போலீசார், தமிழ்நாடு இல்லத்திற்கு நேற்று சென்று விசாரணை நடத்தினர்.
தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து சென்றது உண்மையாகவே உளவுத்துறை அதிகாரிகள் தானா? அல்லது வேறு நபர்களா? என்ற கோணத்தில் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு இல்லத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.


Tags : Kadir Anand ,DMK ,Police investigation , Who threatened DMK MP Kadir Anand? Police investigation
× RELATED சென்னையில் மாற்றுத்திறனாளி பெண்ணை...