×

தங்கம் விலை 3வது நாளாக சரிவு: நகை வாங்குவோர் உற்சாகம்

சென்னை: தங்கம் விலை நேற்று காலை பவுனுக்கு ரூ.320 குறைந்த நிலையில், மாலையில் ரூ.80 அதிகரித்து  பவுன் ரூ.38,560க்கு விற்பனையானது. கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. கொரோனாவிற்கு முன்பு தங்கம் விலை பவுனுக்கு ரூ.32 ஆயிரம் என்ற நிலையில் இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு பவுன் ரூ.43,328 என்ற புதிய உச்சத்தை தொட்டு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு பிறகு பிறகு தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக காணப்பட்டது. கடந்த 19ம் தேதி ஒரு பவுன் 39,664க்கு விற்கப்பட்டது.

கடந்த 21ம்தேதி யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. ஒரு கிராம் 4,915க்கும், பவுன் 39,320க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த நாளும் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் 4,850க்கும், பவுனுக்கு ரூ.520 குறைந்து ஒரு பவுன் 38,800க்கு விற்கப்பட்டது. இந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுன் ரூ.864 அளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது. ஒரு பவுன் ரூ.38,480 ஆக குறைந்தது. ஆனால் மாலையில் ஒரு கிராமுக்கு ரூ.4820ஆக அதிகரித்து ஒரு பவுன் ரூ.38,560 ஆக இருந்தது. இதனால் நேற்று மாலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களாக குறைந்திருப்பது நகை வாங்குவோரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : buyers ,Jewelry , Gold prices fall for 3rd day: Jewelry buyers excited
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை