×

ஆன்லைனில் திமுக உறுப்பினர் சேர்க்கை

செய்யூர்: மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் ஆன்லைன் உறுப்பினர்கள் சேர்க்கை திமுக சார்பில் நேற்று நடந்தது. மதுராந்தகம் ஒன்றியம் சரவம்பாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் ஆன்லைன் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று நடந்தது. மதுராந்தகம் திமுக ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர் கலந்துகொண்டு, உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்து, கட்சியில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினர். இதில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திமுகவில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி, மதுராந்தகம் ஒன்றிய துணை செயலாளர் தணிகையரசு, மாவட்ட பிரதிநிதி கிணார் அரசு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சசிகுமார், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சங்கர்,  சரவம்பாக்கம் ஊராட்சி செயலாளர் சக்கரபாணி, நிர்வாகிகள் ராஜேந்திரன்,  ராமகிருஷ்ணன், தினேஷ், ஏக்நாத், டில்லிபாபு, காதிமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சின்ன காஞ்சிபுரம் கலைஞர் பவளவிழா மாளிகையில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எல்லோரும் நம்முடன் என்கிற மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து  காஞ்சி தெற்கு மாவட்டத்தில், தொழில்நுட்ப அணி ஒருங்கிணைத்த உறுப்பினர் சேர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதனை மாவட்ட செயலாளர் க.சுந்தர் துவக்கி வைத்தாா். இதில், ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உறுப்பினர்களாக திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாவட்ட அவைத்தலைவர் சேகரன், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி.சீனிவாசன், நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார்,    குமணன், சாலவாக்கம் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம்: மதுராந்தகம், செய்யூர் சட்டமன்ற தொகுதிகளில் ஆன்லைன் புதிய உறுப்பினர் சேர்க்கை நேற்று மதுராந்தகம் நகர திமுக அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மதுராந்தகம் நகர செயலாளர் குமார், எம்எல்ஏ புகழேந்தி, மாவட்ட பொருளாளர் டி.வி.கோகுலகண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் ஜியாவுதீன், துணை அமைப்பாளர் யோகானந்தம், மதுராந்தகம் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.Tags : DMK , Online DMK Member Admission
× RELATED மேலகூட்டுடன்காட்டில் திமுக உறுப்பினர் சேர்க்கை