முதியவரை தாக்கி பணம் பறிப்பு: மர்மநபருக்கு வலை

புழல்: முதியவரை, மர்மநபர் கல்லால் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றார். காயமடைந்து மயங்கி கிடந்த அவரை போலீசார் மீட்டனர். செங்குன்றம் மார்க்கெட் ஜிஎன்டி சாலை அருகில் நேற்று காலை 7 மணிக்கு பெயர், முகவரி தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் விழுந்து கிடந்தார். அவரது வலது  தாடையில் காயம் ஏற்பட்டு, குடிபோதையில் இருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, அதன் மூலம், மயங்கி கிடந்தவரை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதற்கிடையில், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது இரவு 1.45 மணியளவில், மர்மநபர்க ஒருவர், முதியவரை கல்லால் தாக்கி, அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>