12 லட்சம் திருடியவர் கைது

தண்டையார்பேட்டை: முத்தியால்பேட்டை பவளக்காரன் தெருவை சேர்ந்த பாஸ்கர்(45) மற்றும் ஏழு கிணறு பகுதியை சேர்ந்த ரமேஷ்(45) ஆகியோர் தங்களது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து கடந்த 4 வருடங்களாக பைனான்ஸ் கம்பெனி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பங்குதாரரான ரமேஷின் நடவடிக்கை சரியில்லை என்பதால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவரை பைனான்ஸ் கம்பெனியில் இருந்து நீக்கிவிட்டனர். இதற்கிடையில், ரமேஷ் லாக்கர் சாவியை பயன்படுத்தி அதில் இருந்த 12 லட்சத்தை திருடினார். இதனையடுத்து, நேற்று வழக்கம்போல் பாஸ்கர் லாக்கரை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த 12 லட்சம் காணாமல்போனது. புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் ரமேஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>