×

குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை திறக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ்  டிவிட்டர் பதிவு: குஜராத்தில் உள்ள மணிநகரில் செயல்பட்டு வரும் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் கூறி அப்பள்ளி மூடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. குஜராத் அரசை தமிழக அரசு தொடர்பு கொண்டு தமிழ்ப்பள்ளியை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் மேல்நிலைப்பள்ளி பிரதமர் மோடி முதல்வராக இருந்த போது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மணிநகர் தொகுதியில் உள்ளது. தமிழ்மீது பற்று கொண்ட பிரதமர் தலையிட்டு தமிழ்ப் பள்ளியை உடனடியாக திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.Tags : Tamil ,school ,Gujarat ,Ramadas , Closed Tamil school should be reopened in Gujarat: Ramadas insists
× RELATED தமிழகத்தில் 303 அரசு பள்ளி...