×

காற்று மாசுபாட்டை தடுக்கும் மின்சார வாகனம்!! ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு..!! குவியும் பாராட்டுகள்!!!

கோவை:  காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனத்தை கோவை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். குறைந்த தூர பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தின் விலையும் மிக மிக குறைவு என்பதுதான் ஆச்சர்யம். பெட்ரோல் பைக்குகளுடன் சாலைகளில் வலம் வரும் இந்த இருசக்கர வாகனம் முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்குகிறது. சுற்று சூழல் பாதிப்பு, பெட்ரோல் விலை உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு விடை கொடுக்கும் இந்த பைக், கோவை தனியார் கல்லூரி மாணவர்களின் முயற்சியால் உருவாகி இருக்கிறது. பொதுவாக மின்சாரத்தால் இயங்கும் பைக்குகள் அதிக எடை மற்றும் விலையுடன் இருக்கும்.

ஆனால் கோவை மாணவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த பைக்கின் மொத்த எடையே 44 கிலோ மட்டுமே. மேலும் வாகனத்தின் விலை 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே. நாள்தோறும் 10 கிலோ மீட்டர் வீதம் பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்கள் ஆண்டுக்கு 70 கிலோ கார்பனை வெளியிடுகின்றன. ஆனால் இந்த ரிக் பைக் சுற்றுப்புறத்தை துளியும் மாசுபடுத்துவதில்லை. ஒரு முறை 0.6 யூனிட் மின்சாரம் ஏற்றினால் அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம்.  மணிக்கு அதிகபட்சமாக 30 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய இந்த ரிக் வாகனத்தை குறைந்த தூர பயணத்திற்கு பயன்படுத்த முடியும். மேலும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில், வாகனத்தை மேன்மைப்படுத்தவும் கோவை மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Coimbatore , Air pollution, electric vehicle, .cov students, ridiculous
× RELATED அய்யோ தொண்டை கம்முதே! டெல்லி மக்களை கதற வைக்கும் காற்று மாசு