×

தங்கள் நாட்டு எல்லையை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து சீனா 11 கட்டிடங்களை அமைத்துள்ளதாக நேபாளம் குற்றச்சாட்டு

ஹம்லா: தங்கள் நாட்டு எல்லையை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து சீனா 11 கட்டிடங்களை அமைத்துள்ளதாக நேபாளம் குற்றஞ்சாட்டியுள்ளது. சமீபத்திய காலங்களில், சீனாவின் எல்லை பரப்பு அதிகரித்து கொண்டேசெல்கிறது. சீனா பல நாடுகளின் எல்லைகளிலும் நுழைந்து சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுகிறது. சீனாவின் விரிவாக்க வடிவமைப்புகள், தற்போது நேபாளத்தையும் வேட்டையாடுகின்றன. இது நாட்டின் மற்றொரு பகுதியை ஆக்கிரமித்து உள்ளது.

நேபாள பிரதேசத்தில் அந்நாட்டின் அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக சீனா 11 கட்டிடங்களை கட்டியுள்ளது. நேபாளத்தின் ஹம்லா மாவட்டத்தில் சீனா இரகசியமாக கட்டுமானங்களை கட்டியுள்ளது. மேலும் இந்த பகுதியில் நேபாள மக்கள், அதிகாரிகள் நுழைவதையும் சீன வீரர்கள் தடுப்பதாகவும் கூறப்படுகிறது. உள்ளூர் கிராம சபை தலைவர் விஷ்ணு பகதூர் லாமா, இங்கு வழக்கமான சுற்றுப்பயணம் சென்றபோது, இந்த விஷயம் முதலில் வெளிச்சத்திற்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து விஷ்ணு பகதூர் லாமா, ஹம்லா மாவட்ட தலைமை அதிகாரி சிரஞ்சீவி கிரிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட அதிகாரி சிரஞ்சீவி கிரி தலைமையிலான குழு சீனா ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் இடத்தில் வரைபடத்தைக் கொண்டு ஆய்வு செய்தது. அதில் நேபாள எல்லைக்குள் சீனா கட்டிடங்கள் எழுப்பியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தகவல் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள 11 வீடுகளில், ஒரு வீட்டில் சீனா பாதுகாப்புப் படையினர் வசிப்பதாகவும் மற்றவை காலியாக உள்ளதாகாவும் உள்ளூர் கிராம சபை தலைவர் விஷ்ணு பகதூர் லாமா தெரிவித்துள்ளார்.


Tags : Nepal ,buildings ,China ,border , Nepal accuses China of illegally occupying its borders and erecting 11 buildings
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது