×

கல்யாணமான 12 நாட்களில் பிரபல நடிகை பரபரப்பு பாலியல் புகார்: காதல் கணவன் கைது

பனாஜி: திருமணமான 12 நாளில் தனது கணவன் மீது பாலியல் புகார் கூறியதால், அவர் கைது செய்யப்பட்டார். பாலிவுட் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் சாம் பாம்வே என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ, போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பூனம் பாண்டே ஷேர் செய்து வந்தார். திருமணத்திற்கு முன்பே தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு, கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் முடிந்தது. ெதாடர்ந்து கடந்த 10ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமண போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பாண்டே ஷேர் செய்திருந்தார்.

கடந்த 16ம் தேதி பூனம் பாண்டேவும், அவரது கணவரும்‘ஹனிமூன்’புறப்பட்டனர். இருவரும் மும்பை விமான நிலையத்தில் கேமராக்களின் கண்களில் சிக்கினர். அங்கே, இருவரும் முத்தம் கொடுத்து ‘போஸ்’கொடுத்தனர். இவர்களின் நெருக்கமான ஹனிமூன் புகைப்படம், வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். கொரோனா விதிகளை மீறியதாக இவர்கள் மீது புகாரும் எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது கணவரான சாம் பாம்பே, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் கோவா போலீசில் நடிகை பூனம் பாண்டே புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சாம் பாம்பேவை கோவா போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தெற்கு கோவாவின் கனகோனா இன்ஸ்பெக்டர் துக்காராம் சவான் கூறுகையில், ‘கணவர் சாம் பாம்பே மீது நடிகை பூனம் பாண்டே பாலியல் பலாத்காரம், அடித்து துன்புறுத்தியது தொடர்பாக புகார் கொடுத்தார்.

அதன்படி பூனம் பாண்டே கட்டாய மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். புகாரின் அடிப்படையில் கணவர் சாம் பாம்பே கைது செய்யப்பட்டுள்ளார்’என்றார். கணவன் மீது புகார் கூறிய பூனம் பாண்டே, தற்போது வெளியூரில் சினிமா ஷீட்டிங்கில் உள்ளார்.

Tags : Love Husband Arrested , Celebrity Actress Sensational Sex Complaint In 12 Days Of Marriage: Love Husband Arrested
× RELATED பெண்ணின் திருமண வயது 21?