திருவனந்தபுரம், பாலக்காடு பகுதிகளில் லாரி, 2 கார்களில் கடத்தி வரப்பட்ட 270 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம், திருவனந்தபுரம், பாலக்காடு பகுதிகளில் லாரி, 2 கார்களில் கடத்தி வரப்பட்ட 270 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்ததாக நாமக்கல்லை சேர்ந்த சுப்ரமணியன், சிவகங்கையை சேர்ந்த மலைச்சாமி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். மேலும் கடத்தி வரப்பட்ட  270 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.10 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>