×

ஆண்டிபட்டி அருகே தரமற்ற பணியால் தண்ணீர் கசியும் புதிய குடிநீர் தொட்டி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஊரா ட்சி ஒன்றியம், கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில் மாயாண்டிபட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குன்னூர்-பாலக்கோம்பை கூட்டு குடிநீர் திட்டம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கிராமத்தில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்ததால், ரூ.25 லட்சத்தில் புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது.

இந்த தொட்டியில் நேற்று முன்தினம் தண்ணீர் நிரப்பி சோதனை செய்தனர். அப்போது தொட்டியின் நான்குபுறமும் தண்ணீர் கசிவு ஏற்பட்டு சொட்டு, சொட்டாக நீர் வடிகிறது. இதனா ல், கிராமமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘புதிதாக கட்டிய மேல்நிலை குடிநீர் தொட்டியை சோதனை செய்ததில், பெருமளவில் தண்ணீர் கசிகிறது. தரமற்ற முறையில் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதனால், அரசு பணம் விரயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, குடிநீர் தொட்டியை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

Tags : Andipatti , Andipatti, water, drinking trough
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...