திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்தடை காரணமாக நேற்று 4 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்தடை காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்தடையால் ஆக்சிஜன் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அனுராதா என்பவர் உயரிழந்துள்ளார். அனுராதாவின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு அளித்துள்ளனர். அலட்சியமாக செயல்பட்ட மருத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் 4 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மின்தடையால் வெண்டிலேட்டர் ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டு 4 பேரும் உயிரிழப்பு என்று தகவல் வெளியாகியுள்ளது. கவுரவன், யசோதா உள்பட 4 பேர் நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசியுவில் காலை முதல் மின்சாரம் இல்லாததால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டது. அதில் சிகிச்சைக்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேர் நேற்று காலை முதல் மின்சாரம் இல்லாததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மின்வயர் துண்டிப்புக்கும், தங்களுக்கும் சம்மந்தமில்லை என மின்வாரியம் விளக்கம் அளித்திருந்தது. மருத்துவமனையில் கட்டுமானப் பணியின் போது உள் மின் இணைப்பில் பழுது ஏற்பட்டுள்ளது எனவும் கூறியிருந்தது. திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு எந்தவித பாதிப்புமின்றி மின் விநியோகம் சீராக உள்ளது எனவும் கூறியது.

Related Stories: