கொரோனா வைரஸை சீனா திட்டமிட்டு பரப்பியது :ஐ.நா சபையின் 75வது ஆண்டு விழாவில் கொதித்தெழுந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!!

வாஷிங்டன் : கொரோனா வைரஸை சீனா திட்டமிட்டு பரப்பியது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையின் 75வது ஆண்டு தினத்தினை நினைவுகூரும் வகையில் பொது சபை கூட்டம் ஒன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டெரஸ், ஐநா சபை தலைவர் வோல்கன் போஸ்கிர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் உலக தலைவர்கள் காணொளி காட்சி வழியே பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பல நாட்டு தலைவர்களும் பேசி வருகின்றனர்.

அந்த வகையில்,  ஐநா பொதுக்கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றிய அதிபர் டிரம்ப், இன்று உலகையே முடக்கிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவை பொறுப்பாளியாக்கவேண்டும். 2ம் உலகப் போருக்கு பிறகு உலக நாடுகள் மிகப்பெரிய பேரிடரை எதிர்கொண்டு வருகிறது. சீனா, தனது  நாட்டில் உள்நாட்டு விமான சேவைக்கு தடைவிதித்து விட்டு , வெளிநாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கி கொரோனாவை உலகிற்கு பரப்பி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி விட்டது. உலக சுகாதார நிறுவனத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து தவறான தகவல்களை சீனா வெளியிட்டது.சீனாவின் இத்தகைய செயல்களுக்கு ஐநா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

Related Stories: