×

பா.ஜ.க. தலைவர் முருகன் பங்கேற்ற கூட்டத்தில் விதிமீறல்...!! 970 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குமரி மாவட்ட காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை!!!

கன்னியாகுமரி:  கன்னியாகுமரியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த 970 பேர் மீது காவல் துறையினர் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 144 தடை உத்தரவானது கடந்த மார்ச் மாதம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக போடப்பட்டது. இதனையடுத்து அத்தியாவசிய தேவைகளை மட்டும் பூர்த்திசெய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு ஊரடங்குகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு ஒரு சில கட்டுப்பாடுகள் மட்டுமே நடைமுறையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஊரடங்கு விதிகளை மீறி ஏராளமான வாகனங்களில் பாஜகவினர் கூட்டமாக சென்றதால் சுமார் 970 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது கன்னியாகுமரி மாவட்டம் பருத்திகாட்டுவிளை என்ற இடத்தில் கடந்த 21ம் தேதி பாஜக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் முருகன் கலந்துகொண்டார். இதற்காக கன்னியாகுமரி வந்த அவரை அழைத்துக்கொண்டு மாவட்ட எல்லையான முப்பந்தல் என்ற இடத்திலிருந்து அக்கட்சியை சேர்ந்தவர்கள் வாகனங்களில் வரிசைகட்டி ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து, 144 தடை உத்தரவை மீறி ஊர்வலமாக சென்றதற்காக பாஜகாவை சேர்ந்த 970 பேர் மீது குமரி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கடந்த 1ம் தேதிகூட பாஜக அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் சமூக இடைவெளியின்றி ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டுள்ளனர். இதனால் ஏற்கனவே கட்சி தலைவர் முருகன் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Murugan ,BJP ,meeting ,district police ,Kumari , UN General Assembly, America, China, Conflict, World Nations, Fear...
× RELATED வேட்புமனு தாக்கல் செய்ய குறித்த...