அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால் உலகளவில் அதற்குரிய பெயரும் தரமும் பறிபோய்விடும் : ஆளுநர் புரோஹித்துக்கு பேராசிரியர்கள் கடிதம்!!

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கும் சட்ட மசோதா கடந்த 16-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும், புதிதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றினால் உலகளவில் அதற்குரிய பெயரும் தரமும் போய்விடும். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. அண்ணா பல்கலையை பிரித்தால் அதன் கீழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு உரிய நிதி கிடைக்காது.மாணவர்கள் எந்த பல்கலையின் கீழ் தேர்ச்சி பெற்றார்கள் என்ற குழப்பம் நீடிக்கும்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரப்பட்டுள்ளது தற்போது நிலுவையில் உள்ளது. முன்னணி நிறுவனங்கள்,வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன்  செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கேள்வி குறியாகும். மாணவர்களின் சான்றிதழ் செல்லாமல் போவதுடன் ஐஓஇ அந்தஸ்தும் கைநழுவிச் செல்லும். அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அண்ணா பல்கலை கழகத்தின் புகழ், கவுரவத்தை அரசு தக்கவைக்க வேண்டும்.  எனவே பெயரை மாற்றக் கூடாதுஎன்று அரசுக்கு உத்தரவிடக் கோரி கடிதத்தில் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: