×

ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று : உலகளவில் கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்!!

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 33 லட்சமாக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 17 லட்சத்து 63 ஆயிரத்து 409 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 74 லட்சத்து 21 ஆயிரத்து 49 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 62 ஆயிரத்து 21 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 74 ஆயிரத்து 545 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 33 லட்சத்து 67 ஆயிரத்து 815 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 44,97,868
அமெரிக்கா - 43,43,754
பிரேசில் - 39,45,627
ரஷியா - 9,17,949
கொலம்பியா - 6,50,801
பெரு - 6,22,418
தென் ஆப்ரிக்கா - 5,92,904

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 2,05,447
பிரேசில் - 1,38,159
இந்தியா - 88,935
மெக்சிகோ - 73,697
இங்கிலாந்து - 41,825
இத்தாலி - 35,738
பெரு - 31,474
பிரான்ஸ் - 31,416
ஸ்பெயின் - 30,904
ஈரான் - 24,656
கொலம்பியா - 24,570

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 70,97,376
இந்தியா - 55,62,664
பிரேசில் - 45,95,335
ரஷியா - 11,15,810
கொலம்பியா - 7,77,537
பெரு - 7,72,896
மெக்சிகோ - 7,00,580
ஸ்பெயின் - 6,82,267
தென் ஆப்பிரிக்கா - 6,63,282
அர்ஜெண்டினா - 6,52,174

Tags : India ,world , 20 lakhs, infection, corona, India, first place
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!