×

கொரோனா தொற்றுக்கு திமுக கவுன்சிலர் பலி

திருத்தணி: திருவாலங்காட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக கவுன்சிலர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவாலங்காடு ஒன்றியம் 1வது வார்டு திமுக கவுன்சிலர் சுந்தரம்மாள் (65). இவர், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாரர். இதனைத்தொடர்ந்து, சென்னை அரசு மருத்துவமனையில் சுந்தரம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்றுவந்த சுந்தரம்மாள் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், ஒன்றிய திமுக செயலாளர் மேற்கு கூலூர் ராஜேந்திரன், மாநில தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் விஜயராகவன், திருவாலங்காடு ஒன்றிய குழு தலைவர் ஜீவா, திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காஞ்சி பாடி யுவராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகரன் உள்பட பலர் சுந்தரம்மாளின் மகன் குமாரசாமிக்கு ஆறுதல் கூறினர்.

Tags : DMK ,councilor , DMK councilor dies of corona infection
× RELATED மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி