×

பணம் கொடுக்க மறுத்த ஓட்டல் மாஸ்டருக்கு பீர்பாட்டிலால் அடி: போதை ஆசாமிகளுக்கு வலை

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணம் கொடுக்க மறுத்த ஓட்டல் மாஸ்டரை பீர்பாட்டிலால் அடித்து மண்டையை உடைத்த போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை முகப்பேர் சாய்பாபா கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (36). இவர், அம்பத்தூர் அடுத்த கீழ் அயனம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சந்தோஷ் வேலை முடிந்து ஓட்டலில் இருந்து சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை சர்வீஸ் சாலையில்  வந்தபோது, பைக்கில் போதையில் வந்த 2 பேர் சந்தோஷை வழிமறித்து மிரட்டி பணம் கேட்டனர். இதற்கு சந்தோஷ் தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த இருவரும் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை எடுத்து சந்தோஷ் தலையில் அடித்தனர். இதில், அவரது மண்டை உடைந்தது இதுகுறித்து, புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் போதை ஆசாமிகளை  வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Beerpottil , Hotel owner beaten up for refusing to pay: Web for drug addicts
× RELATED வாகன சோதனையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மொபட் அபேஸ்: போதை ஆசாமிகளுக்கு வலை