×

கலவை ஊராட்சியில் ரூ.4.5 லட்சத்தில் ஆழ்துளை கிணறு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் கலவை ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு போதிய அளவு குடிநீர் வசதி இல்லாததால் கடந்த வருடம் நாடாளுமன்ற தேர்தலின்போது இப்பகுதியை சேர்ந்த மக்கள் கிராம பகுதியில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி தேர்தலை புறக்கணித்து கிராம சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பூண்டி வட்டார வளர்ச்சி  அலுவலகத்தினர் உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்துக்கொடுப்பதாக உறுதியளித்தனர். இந்நிலையில், ரூ.4.5 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி, ஆழ்துளை கிணறு மற்றும் மோட்டார் பம்ப் பணிகள் நடந்து முடிந்தநிலையில், நேற்று முன்தினம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சிமன்ற தலைவர் ரோசம்மா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரதாப், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முனுசாமி, பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட பூண்டி ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணா, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன் ஆகியோர் புதிய ஆழ்துளை கிணறு குடிநீர் மோட்டாரை இயக்கி வைத்தனர்.

Tags : Deep well at a cost of Rs. 4.5 lakhs in the compound panchayat
× RELATED கூடுதல் விலைக்கு விற்றதால் உரக்கடையில் விற்பனைக்கு தடை