×

வாலிபர்களை தாக்கி வழிப்பறி

ஆவடி: வாலிபர்களை தாக்கி வழிப்பறி செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் லைவீசி தேடுகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நோமன்கான்(32). இவரது நண்பர் உங்கல்நாவாட்ச்(24). இருவரும் பூந்தமல்லி பகுதியில் தங்கியிருந்து கேஸ் ஸ்டவ், டி.வி விற்பனை செய்கின்றனர். நேற்று மதியம் இருவரும் தங்களது பைக்கில் ஆவடி அடுத்த அண்ணாநகர் காந்தி 1வது தெருவில் டிவி விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த 3 பேர் இவர்களிடம் ஸ்டவ் வேண்டும் எனக் கூறி அங்கிருந்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் ஆவடி டேங்க் பேக்டரி மைதானம் அருகில் வந்து மிரட்டி செல்போன் மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து அவர்களை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து, புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா மூலம் வழிப்பறி ஆசாமிகளை தேடுகின்றனர்.

Tags : teenagers , Attack and seduce teenagers
× RELATED மின்கம்பத்தில் கட்டி வைத்து வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி