×

செல்போன் திருடியவர் கைது

புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை  சேர்ந்த ராஜேஷ்(31). என்பவர் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 2 செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை தலையணைக்கு கீழே வைத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். பின்னர் நேற்று அதிகாலை அவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து, செங்குன்றம் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்த முகமதுகனி (24) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 2 செல்போன், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Cell phone thief , Cell phone thief arrested
× RELATED செல்போன் திருடியவர் கைது