×

முதியவரிடம் செல்போன் பறிப்பு

புழல்: சோழவரம் ஆங்காடு ஊராட்சி சிறுணியம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (65). இவர் நேற்று முன்தினம் மாலை சென்னைக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினார். புழல் மத்திய சிறைச்சாலை அருகே சிக்னலுக்காக நின்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் குப்புசாமியின் செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதுதொடர்பாக, குப்புசாமி புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : elderly , Cellphone flush to the elderly
× RELATED வாலிபரிடம் கத்திமுனையில் நகை, செல்போன் பறிப்பு