ஐபிஎல் டி20 2020: சிங்கத்தின் வேட்டை தொடருமா?...சென்னை அணிக்கு 217 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ஷார்ஜா: ஐபிஎல் 2020 டி20 தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதும் ஐபிஎல் போட்டி, ஷார்ஜா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். தொடர்ந்து, ராஜஸ்தான்  ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அணயின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் யஷ்சாஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

தொடர்ந்து, 6 பந்துகளுக்கு 1 6 ரன்கள் எடுத்த நிலையில், தீபக் சஹார் பந்தில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி சூடுபிடித்தது. அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 19 பந்துகளில்  அரைசதம் விளாசினார். இருவரது கூட்டணி 100-ரன்களுக்கு மேல் எடுத்தது. இருப்பினும், 32 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி என்கிடி பந்தில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, கேப்டன் ஸ்மித் உடன் டேவிட் மில்லர் கை  கொடுத்தார். இருப்பினும், பந்துகள் எதுவும் காணாமல் ரன்கள் எதுவும் எடுக்காமல் டேவிட் மில்லர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ராபின் உத்தப்பா களமிறங்க அவரும் 9 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து பியூஷ் சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, ராகுல் திவெட்டியா களமிறங்கினார். இருப்பினும், 8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில், சாம் கரன் பந்தில் ராகுல் திவெட்டியா ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ரியான் பராக் களமிறங்க 4 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த  நிலையில், சாம் கரன் பந்தில் டியன் பராக் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, டாம் குர்ரன் களமிறங்கினார். இருப்பினும், 36 பந்துகளில் அரைசதம் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 47 பந்துகளில் 69 ரன்கள் எடுத்த  நிலையில், சாம் கரன் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஜோஃப்ரா ஆர்ச்சர் களமிறங்க, கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடினார். தொடர்ந்து, 4 சிக்ஸ் அடித்து ஆட்ட நாயகனாக தன்னை காண்பித்தார்.

 

தொடர்ந்து, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 216 ரன்கள் ராஜஸ்தான் அணி எடுத்தது. ஜோஃப்ரா ஆர்ச்சர் 8 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தும், டாம் குர்ரன் 9 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இதனையடுத்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கவுள்ளது. முதல் போட்டியில் வெற்றிபெற்றதால் சிஎஸ்கே அணி

2-வது போட்டியில் வெற்றி தொடருமா? என்பது காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2008ல் ஷேன் வார்னே தலைமையில் ஐபிஎல் கோப்பையை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது. அதன் பின்பு அந்த அணி ஐபிஎல் தொடர்களில் பெரியளவில் சோபிக்கவில்லை. கடந்த 2019 ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை  வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிகள் பட்டியலில் 8ம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: