×

கேரள அகழ்வாராய்ச்சியில் ரோமானிய பேரரசரின் முத்திரை கண்டுபிடிப்பு

திருவனந்தபுரம்: ரோமானிய பேரரசராக அகஸ்டஸ் சீசர் பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் பயன்படுத்திய மோதிர முத்திரை ‘ஸ்பின்க்ஸ்’ கேரளாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சிக்கு அருகே கொடுங்கல்லூர்- பரவூருக்கு இடையிலான ‘பட்டணம்’ எனும் பகுதி உள்ளது. இங்கு ‘பாமா’ தொல்பொருள் நிறுவனம் தலைமையில் 10வது சீசன் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. இதில், ரோமானிய பேரரசராக அகஸ்டஸ் சீசர் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் பயன்படுத்திய மோதிர முத்திரை ‘ஸ்பின்க்ஸ்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோதிர முத்திரை கிமு 1 முதல் கிபி 1ம் நூற்றாண்டுக்கு உட்பட்டதாக கருதப்படுகிறது.

மேலும் கிரேக்க-ரோமானிய கலை மரபில் மனித தலையின் சிறிய சிற்பமும் அங்கு காணப்பட்டது. வெளிநாட்டு வர்த்தக குழுக்களின் தங்குதளமாக ேகரள மாநிலம் ‘பட்டணம்’ பகுதி இருந்து வந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தும் முக்கியமான ஆதாரமாக இவை உள்ளன. இவை ‘பட்டணம்’ பகுதியில் இருந்து கிடைக்கும் 3வது பழங்கால ெபாருட்கள் ஆகும். ஏற்கனவே, விலைமதிப்பற்ற கொர்னேலிய கல்லால் செய்யப்பட்ட 2 லாக்கெட்டுகள் இங்கிருந்து கிடைத்துள்ளன. அவற்றில் சிங்கம் வடிவ லாக்கெட் 2010ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல ரோமானிய தெய்வமான ‘பார்ச்சூன்’ உருவத்துடன் கூடிய லாக்கெட் 2014ம் ஆண்டில் கிடைத்தது. இவை 3ம் ஒரே பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

கிரேக்க - ரோமானிய காலத்தில் மோதிர முத்திரையாக பயன்படுத்தப்பட்ட, விலைமதிப்பற்ற இந்த கலைப்பொருட்கள், தெற்காசியாவில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ேமலும் பட்டணம்’ பகுதியில் கண்டெடுத்த ஸ்பின்க்ஸ்’சும், அகஸ்டஸ் சீசர் பயன்படுத்திய ேமாதிர முத்திரையும் ஒன்றுபோல் உள்ளன என ரோமின் அகழ்வாராய்ச்சி இயக்குநரும், ரோம் பல்கலைக்கழக பேராசிரியருமான ஜூலியோ ரோகோவும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Tags : Roman Emperor ,Kerala , Discovery of the seal of the Roman Emperor in Kerala excavations
× RELATED மதுரையில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த...