×

வடலூர் அருகே சாலை பள்ளத்தால் தொடர் விபத்து: அதிகாரிகள் சீரமைப்பார்களா?

நெய்வேலி: கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து சேத்தியாத்தோப்பு செல்லும் சாலையில் தோமையார் நகரில் மாதாகோயில் அமைந்துள்ளது. இந்த மாதாகோயில் எதிரில் உள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இச்சாலை விக்கிரவண்டி- தஞ்சாவூர் செல்லும் சாலை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. மேலும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் இச்சாலை வழியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பள்ளத்தில் பலர் விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் இச்சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அதிவேகமாக வரும் வாகனங்கள் அவ்வப்போது விபத்துக்களில் சிக்கி தவிக்கின்றனர். எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்மந்தப்பட்ட  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திகின்றனர்.

Tags : Road accident ,Vadalur , Road accident near Vadalur: Will the authorities repair it?
× RELATED ஆப்கன். கிரிக்கெட் வீரர் சாலை விபத்தில் மரணம்