×

வெங்காயம், உருளைக்கிழங்கு அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கம் : அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றம்!!

டெல்லி : விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும், வேளாண் துறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கிலும் கொண்டுவரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா-2020

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா-2020 திங்கள்கிழமை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. 1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தில் தற்போது கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் மூலம், வெங்காயம், உருளைக்கிழங்கு, தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதிலும், இருப்பு வைப்பதிலும் எந்தவிதமான கட்டுப்பாடும் இனிமேல் விதிக்கப்படாது.அரசின் அமைப்புகள் அதிகமான தலையீடுகளை உண்டாக்குமோ என்ற அச்சமின்றி தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் வேளாண்துறையில் அதிகமான முதலீடுகளை செய்ய முடியும் என்பதாகும்.

இரு அவைகளிலும் நிறைவேற்றம்

இந்த மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடந்தது. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்தார். இறுதியில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை ஆதரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்,அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி வரிசைகளில் உறுப்பினர்கள் யாரும் இல்லாத நிலையில், எதிர்ப்பின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதன்பின் இந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு ஒப்புதல் பெறப்பட்டுச் சட்டமாகும்.

Tags : Farmers, AIADMK Government, Agriculture Bill, Chief Minister Palanisamy, Description...
× RELATED தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களில் 4...