×

75 ஆண்டு சேவையில் ஐ.நா..நமது உலகம் இன்று சிறப்பான நிலையில் இருப்பதற்கு ஐக்கிய நாடுகள் அவையே காரணம் என பிரதமர் மோடி பாராட்டு!!

டெல்லி : விரிவான சீர்திருத்தங்கள் ஏதுமில்லாமல் ஐக்கிய நாடுகள் அவை நெருக்கடியை  எதிர்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு துவங்கி இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதற்காக இந்த ஆண்டு இன்று முதல் வரும் 29ம் தேதி வரை ஐநா பொது சபையில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவாத நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் பல்வேறு தலைவர்கள் காணொலி வாயிலாக உரை நிகழ்த்தி வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் இதில் பங்கேற்று பேசினார். விரிவான சீர்திருத்தங்கள் இன்றி ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டுள்ளதாகவும் உலகம் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ள இந்த சூழலில், ஐக்கிய நாடுகள் அவையில் பன்முகத்தன்மை அவசியமான ஒன்று என்றும் பிரதமர் மோடி அப்போது குறிப்பிட்டார்.

காலாவதியான கட்டமைப்புகளுடன் இன்றைய சாவல்களை எதிர்த்துப் போராட முடியாது என்று நரேந்திர மோடி சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் மனித நலனில் கவனம் செலுத்தும் பன்முகத் தன்மை உடைய சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாக கூறினார். உலகம் இன்று சிறப்பான நிலையில் உள்ளது என்றால், ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பான செயல்பாடுகளே காரணம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,world ,United Nations , Do not know Hindi, loan, denial, bank manager, notice, Jayangondam...
× RELATED எரிசக்தி துறையில் உலகின் மூன்றாவது...