×

நடவடிக்கை ரத்து செய்யப்படும் வரை செல்ல மாட்டோம்...!! சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 2-வது நாளாக தர்ணா

டெல்லி: சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். டெரிக் ஓ பிரையன் கே.கே.ராஜேஷ், ராஜீவ் சத்வவ், ரிபுன் போரா, டோலா சென், சையது நாசர் உசேன், சஞ்சய் சிங், எளமறம் கரீம் ஆகியோர் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது. சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து விடிய விடிய எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 2வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அவையில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட உறுப்பினர்கள் 8 பேரை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 8 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தர்ணாவில் நேற்று ஈடுபட்டனர். இரவு முழுவதையும் காந்தி சிலை முன்பே அமர்ந்த எம்.பிக்கள், தங்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனவும் உறுதிபட கூறினர். இந்நிலையில் தொடர்ந்து 2வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Tags : MPs ,premises ,Parliament , We will not go until the action is canceled ... !! Suspended MPs tarna for 2nd day in Parliament premises
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...