×

உலகத்தை சுழற்றி அடிக்கும் கொடிய வைரஸ்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.68 லட்சத்தை தாண்டியது...!! 3.14 கோடி பேர் பாதிப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.68 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 9,68,905 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 3,14,71,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23,094,476 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 7,408,009 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 61,721 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,130 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 14 லட்சத்து 71 ஆயிரத்து 62 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 74 லட்சத்து 7 ஆயிரத்து 885 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 688 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 2 கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 68 ஆயிரத்து 874 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : world , The deadly virus that is swirling around the world; The death toll has crossed 9.68 lakh ... !! 3 crore people affected
× RELATED சில்லி பாயின்ட்…