×

லாட்டரியில் கோயில் ஊழியருக்கு 12 கோடி பரிசு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அனந்து விஜயன் (24). இவர் எர்ணாகுளத்தில் உள்ள ஏலம்குளம் கோயிலில் பணிபுரிந்து வருகிறார். இவர் கேரள அரசின் திருவோண லாட்டரி டிக்கெட் வாங்கியிருந்தார். இந்த நிலையில் இந்த லாட்டரிக்கான குலுக்கல் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் திருவோணம் பம்பர் பரிசு 12 கோடியை அனந்து விஜயன் வென்றுள்ளார். 12 கோடியில் 10 சதவீத ஏஜென்சி கமிஷன் மற்றும் 30 சதவீத வருமான வரியையும் கழித்தால், அனந்து விஜயனுக்கு 7.56 கோடி கிடைக்கும்.

Tags : temple employee , 12 crore prize for temple employee in lottery
× RELATED ஏலம்போட்டு தமிழ்நாட்டை...