×

தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து மொத்த பாதிப்பு 5.47 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 60  பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாராத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று 80,672 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,344 பேருக்கு தொற்று உறுதியானது.  இதில் சென்னையில் 982 பேர், செங்கல்பட்டில் 219 பேர், திருவள்ளூரில் 212 பேர், காஞ்சிபுரத்தில் 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 337 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 959 ஆண்கள், 2 லட்சத்து 17 ஆயிரத்து 348 பேர் பெண்கள், 29 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,492. ஒட்டுமொத்தமாக இதுவரை 4 லட்சத்து 91 ஆயிரத்து 971 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 60 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் 19 பேர், செங்கல்பட்டு மற்றும் கோவையில் தலா 6 பேர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், வேலூரில் தலா 4 பேர் என மாநிலம் முழுவதும் மொத்தம் 60 பேர் மரணம்  அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,871 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,Tamil Nadu , Corona for 5,344 new people in Tamil Nadu
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி