×

பிறந்த நாளில் இறந்த டிஎஸ்பி

தர்மபுரி:  சேலம் மாவட்டம் சீலிநாயக்கன்பட்டிபுதூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். தர்மபுரியில், டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுமதி, 5 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதால், தர்மபுரி டவுன்  போலீஸ் ஸ்டேஷன் எதிர்புறத்தில் உள்ள டி.எஸ்.பி. அலுவலகத்தின்கீழ் தளத்தில், வசித்து வந்தார். நேற்று முன்தினம் ராஜ்குமார் தனது பிறந்தநாளை, சக போலீசாருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதையடுத்து, வீட்டில்  தூங்கியுள்ளார். ஆனால், நேற்று காலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. சந்தேகம் அடைந்த  பணியாளர்கள், சென்று பார்த்தபோது, ராஜ்குமார் இறந்து கிடந்தார்.

Tags : DSP ,birthday , DSP who died on his birthday
× RELATED திமுக மருத்துவர் அணி நிர்வாகி...