×

கொரோனா விதிமீறிய 50 ஆயிரம் பேரிடம் ரூ.1.50 கோடி அபராதம் வசூல்: சென்னையில் ஒரே நாளில் 3.97 லட்சம்

சென்னை: கொரோனா நோய் தடுப்பு தொடர்பான விதிகளை மீறியதாக இதுவரை 50 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.1.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  கொரோனா தொடர்பான விதிகளை பின்பற்றாதவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையில் தமிழக அரசு அவரச சட்டம் பிறப்பித்தது. அதில் யாருக்கு எவ்வளவு அபராதம் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில்  இதுவரை 50 ஆயிரம் பேரிடம் ரூ.1.50 கோடி அபராதமாக வசூலிக்கப்படடுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று மட்டும் 3.97 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக முகக் கவசம் அணியாதோரிடம்தான்  அதிக அளவில் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Tags : corona offenders ,Chennai , Rs 1.50 crore fine collected from 50,000 people for corona irregularities: 3.97 lakh in one day in Chennai
× RELATED சுற்றுலா சிறப்பை ஒளிபரப்பும்...