×

போலி யானை தந்தம் விற்க முயன்ற 4 பேர் கைது

சென்னை: எழும்பூர் கெனட் லைன் சாலையில் உள்ள பாண்டியன் ஓட்டலில் சிலர் யானை தந்தங்களை விற்பனை செய்ய உள்ளதாக தலைமை செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார், அந்த ஓட்டலில் சோதனையிட்டபோது, எண் 211, 213 ஆகிய அறைகளில் 2 யானை தந்தங்களுடன் 4 பேர் இருப்பது தெரிந்தது. விசாரணையில், திருப்பூர் மாவட்டம் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்த திருப்பதி (39), பல்லடம் உமாபதி நகர் தெற்கு பாளையம் பகுதியை சேர்ந்த பாபு (32), திருச்சி மாவட்டம் புதூர் அம்மாசத்திரம் பகுதியை சேர்ந்த பூவரசன் (21), கருமலை பெரிய கோவில் தெருவை சேர்ந்த வரதராஜ பெருமாள் (38) ஆகியோர் என்பதும், அவர்கள் வைத்திருந்தது போலியான யானை தந்தங்கள் என்றும் தெரியவந்தது. இவற்றை யாருக்கு விற்பனை செய்ய வந்தனர் என விசாரிக்கின்றனர்.

Tags : 4 arrested for trying to sell fake ivory
× RELATED உதகை அருகே சின்னகுன்னூர் பகுதியில் யானை தந்தத்தை திருடிய 3 பேர் கைது